Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Maruthapureeswara Swamy Temple, Kallanai, |

அருள்மிகு கருணாம்பிகா அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ மருதபுரீஸ்வர திருக்கோயில்- கல்லணை


அருள்மிகு கருணாம்பிகா அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ மருதபுரீஸ்வர திருக்கோயில்- கல்லணை



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ மருதபுரீஸ்வர ஸ்வாமி 

இறைவி :ஶ்ரீ ஸ்ரீ கருணாம்பிகா அம்பாள்

தல மரம் : மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

ThanjavurDistrict_ MaruthapureeswararTemple_Kallanai_Arasankudi-shivanTemple


Arulmigu Maruthapureeswara Swamy Temple, Kallanai, | அருள்மிகு கருணாம்பிகா அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ மருதபுரீஸ்வர திருக்கோயில்- கல்லணை தல வரலாறு

அரசன்குடி சிவன் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது. திருச்சியின் மற்றுமொரு சிறப்பு கல்லணை. நதியின் குறுக்கே கட்டப்பட்ட, உலகில் முதலாவது அணையே இந்த திருச்சியில் உள்ள கல்லணை தான். 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த கரிகால் பெருவளத்தான் (கரிகாலன்) என்ற மன்னரே, அந்தக் காலத்திலேயே அதிசயிக்கத்தக்க தொழில் நுட்பங்களுடன், இன்றும் அசையாத உறுதி கொண்ட இந்த கல்லணையைக் கட்டினார்.காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் கரிகால் பெருவளத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .

நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும். இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும். அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். நடுவே தண்ணீரில் கரையாத ஒருவிதமான ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.கல்லணையின் அடிப்படைக் கட்டுமானம் அப்படியே இன்னும் நிலைத்திருக்கிறது. புதிப்பிப்பதும், பராமரிப்பதும் மட்டுமே அவ்வப்போது நடைபெறுகிறது. காலத்தால் அழியாத உறுதிமிக்க கல்லணையின் கட்டுமான தொழில்நுட்பம், தண்ணீர் மற்றும் மணல் குறித்த அறிவியல் அறிவு, தமிழர் தம் திறனுக்கு வியப்பூட்டும் ஒரு அதிசய சான்றாகும்

கரிகாலன் கல்லணை கட்டிக்கொண்டு இருக்கும் பொது அணை சரியாக நிற்காமல் உடைந்து விழுந்து கொண்டே இருந்தது அப்போது மன்னன் இருந்த ஊர் தான் அரசன்குடி. அரசன் இவ்வூரில் தங்கியிருந்த போது சிவன் அரசன் கனவில் வந்து தனக்கு இவ்வூரில் கோவில் எழுப்பி வழிபாடு செய்துவிட்டு கல்லணை கட்ட தொடருமாறு கூறினார். சிவன் சொன்னபடி அரசனும் இவூரில் ஒரு திருத்தலம் எழுப்பி சிவனை வழிபட்டு கல்லணை கட்டும் பணியை முடித்தார். அரசன்குடியில் இருந்து சிவனை வழிபட்டு கல்லணை கட்டும் பணியை பார்த்துக் கொண்டதால் இவ்வூர் அரசன்குடி என பெயர் பெற்றது. இத்திருக்கோயில் அரசன்குடி சிவன் கோவில் என்று அழைக்கப்பட்டது. இக்கோவிலில் மன்னன் சிவனை வழிபடுவது போன்ற சிற்பங்களும் உள்ளது.













திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ மருதபுரீஸ்வர ஸ்வாமி திருக்கோயில்
கல்லணை ,அரசன்குடி ,
திருச்சி மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:



ஆலயம் அமைவிடம்: